சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை குழு ஆய்விற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு

0 3032

சிதம்பரம் நடராஜர் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை குழு ஆய்வு செய்வதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோவிலின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஆய்வு செய்வதற்காக அறநிலையத்துறையால் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவினர், இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றனர்.

அதற்கு ஆட்சேபனை தெரிவித்த தீட்சிதர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி வரவு,செலவு கணக்குகள் சரியாக கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், இந்த குழு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், சட்டப்படி அமைக்கப்பட்ட குழு ஆய்வுக்கு வந்தால், ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தீட்சிதர்களின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments