வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கு-அதிகாரப்போக்குடன் செயல்பட்ட 4 அதிகாரிகளுக்கு 4 வார சிறை தண்டனை

0 2905

தெலங்கானாவில், வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கில் அதிகாரப்போக்குடன் செயல்பட்ட ஐபிஎஸ் அதிகாரி உள்பட 4 காவல்துறை அதிகாரிகளுக்கு, 4 வாரம் சிறை தண்டனை விதித்தும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கை விசாரித்த காவல் அதிகாரிகள், திருமண வழக்குகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்த நெறிமுறைகளை மீறி அதிகாரப்போக்குடன் செயல்பட்டதாக நீதிபதி தெரிவித்தார்.

மேலும், குற்றம்சாட்டப்பட்டவர், அவரது குடும்பத்தினருடன் தாய்லாந்தில் இருப்பது தெரிந்தும், புகாரளித்த பெண்ணுடன் இணைந்து போலீசாரும், அவர் தலைமறைவாக உள்ளதாக தவறான தகவலை நீதிமன்றத்துக்கு வழங்கியதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments