ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படம் மாற்றப்பட மாட்டாது - ரிசர்வ் வங்கி
ரூபாய் நோட்டில் இடம் பெறும் மகாத்மா காந்தியின் படத்தை நீக்கிவிட்டு, வேறு தலைவர்களின் படத்தைப் பயன்படுத்தும் திட்டம் ஏதுமில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ரூபாய் நோட்டுகளில் இப்போது உள்ள மகாத்மா காந்தியின் படத்துக்கு பதிலாக வேறு தலைவர்களின் படங்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானதில் எவ்வித உண்மையும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments