வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் இருந்த மருத்துவர் 12 மணி நேர தேடுதலுக்கு பிறகு பத்திரமாக மீட்பு
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரிலிருந்து மருத்துவர் ஒருவர் 12 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.
கர்னூல்- சிப்பகிரி இடையே கல்லேவாகு நீரோடையில் ஒட்டியுள்ள சாலையில் நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த கார் அடித்து செல்லப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு காரை கண்டுபிடித்து அதில் இருந்த மருத்துவரை பத்திரமாக மீட்டனர்.
Comments