காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி பேரலில் அடைத்த அரக்கன்..! அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்றதால் ஆத்திரம்

0 4748
காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி பேரலில் அடைத்த அரக்கன்..! அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்றதால் ஆத்திரம்

காதல் மனைவியை , துண்டு துண்டாக வெட்டி பேரலில் அடைத்து வைத்து விட்டு தப்பிச்சென்ற கணவனை போலீசார் தேடிவருகின்றனர்

தெலங்கானா மாநிலம் மகபூப்நகரை சேர்ந்தவர் அனில் குமார், கடந்த 2020 ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத் எஸ்பிஆர் ஹில்ஸ் பகுதியில் குடித்தனம் நடத்தி வந்தார்.

திருமணமான சில மாதங்களிலேயே அனிலுக்கும், சரோஜாவுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இதனால் சரோஜா கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து பெற்றோர் சமாதானப்படுத்தி சரோஜாவை ஒரு மாதத்திற்கு முன்பு கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சரோஜாவின் பெற்றோர் வழக்கம்போல் போன் செய்தபோது சரோஜா போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

அனிலுக்கு போன் செய்தால் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சரோஜாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டி இருந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜுப்ளி ஹில்ஸ் போலீசார் வீட்டிற்கு வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தண்ணீர் டிரம்மில் சரோஜா உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அடைக்கப்பட்டு இருந்தது . அழுகிய நிலையில் துண்டு துண்டாக காணப்பட்ட சடலத்தை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

போலீஸ் விசாரணையில் அணில் குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து சரோஜாவை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்ததால் இருவருக்குமிடையே தகராறு இருந்து வந்துள்ளது. இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டதால் உடற்பயிற்சி செய்யும் தம்புள்ஸ் என்ற கருவியால் சரோஜாவை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.

காதல் மனைவியை உணர்ச்சி வசப்பட்டு கொலை செய்த அனில், கொலையை மறைக்க உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் உள்ள டிரம்மில் மறைத்து வைத்துவிட்டு அதனை எடுத்துச்சென்று புதரில் வீச திட்டமிட்டுள்ளான் அதற்குள்ளாக மனைவியின் பெற்றோர் தங்கள் மகளை தொடர்பு கொள்ள இயலாததால், அனிலை தொடர்பு கொண்டுள்ளனர்.

இதையடுத்து மாட்டிக் கொள்ளக்கூடாது என்று வீட்டை பூட்டி விட்டு அனில் தலைமறைவானது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிரமாக அனிலை வலைவீசி தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments