மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் மாமனாரை வெட்டி கொன்ற நபர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் மாமனாரை வெட்டி கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
வாகைத்தாவூர் கிராமத்தை சேர்ந்த சந்தனக்குமார் என்ற அந்த நபர் குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆனதால் அவரது மனைவி ஜெயா தனது இரு குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
மனைவியை தன்னுடன் வீட்டிற்கு அனுப்ப மாமனார் மறுத்ததால் ஆத்திரமடைந்த சந்தனக்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது. தலைமறைவாக இருந்த சந்தனக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
Comments