கான்பூர் வன்முறை தொடர்புடைய 40 பேரின் படங்களை வெளியிட்டுள்ள உத்தரப் பிரதேசக் காவல்துறை.!
கான்பூர் வன்முறையில் தொடர்புடைய 40 பேரின் படங்களைச் சுவரொட்டியில் வெளியிட்டுள்ள உத்தரப் பிரதேசக் காவல்துறை, அவர்களைப் பிடிக்கப் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது.
ஜூன் மூன்றாம் நாள் கான்பூரில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 38 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், கல்வீச்சில் ஈடுபட்ட மேலும் நூறு பேரைக் கண்காணிப்புக் கேமரா, வீடியோ பதிவு ஆகியவற்றின் மூலம் அடையாளம் கண்டுள்ளனர்
Comments