முழுவதும் குளிர்சாதன வசதிகளை கொண்ட ரயில் முனையம் பெங்களூருவில் இன்று திறப்பு
கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள பையப்பனஹள்ளியில் விமான நிலையம் போல், முழுவதும் குளிர்சாதன வசதிகளை கொண்ட ரயில் முனையம் இன்று திறக்கப்படுகிறது.
சர் விஸ்வேஸ்வரய்யா பெயரில் அமைக்கப்பட்டுள்ள அந்த முனையம், சுமார் 314 கோடி ரூபாய் செலவில் 4 ஆயிரத்து 200 சதுர மீட்டர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தில், ஏழு நடைமேடைகள் உள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர்களுக்கு உதவும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உணவகங்கள், தங்கும் வசதி ஆகியவற்றுடன், 250 நான்கு சக்கர வாகனங்கள், 900 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Comments