110ஆண்டுகளுக்கு பிறகு லிப்ஸ்டிக் தாவரம் மீண்டும் கண்டுபிடிப்பு
அருணாசலபிரதேசத்தில் 110 ஆண்டுகளுக்கு பிறகு லிப்ஸ்டிக் தாவரம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய தாவரவியல் ஆராய்ச்சி துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அருணாசலபிரதேச வனப்பகுதியில் பூக்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது Anjaw மாவட்டத்தில் ஒரு தாவர மாதிரிகளை சேகரித்தனர்.
அதை ஆய்வு செய்ததில், அது இந்திய லிப்ஸ்டிக் தாவரம்தான் என்று கண்டறிந்துள்ளனர். ஈரப்பதமான, பசுமையான வனத்தில் 543 மீட்டர் முதல் ஆயிரத்து 134 மீட்டர் உயரமான பகுதிகளில் இது வளரக்கூடியது.
Comments