முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய உள்ளதாக பாக்.அமைச்சர் அறிவிப்பு..!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு முன்ஜாமீன் முடிவடைந்ததும் அவர் கைது செய்யப்படுவார் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆம் தேதி பெஷாவர் நீதிமன்றம் இம்ரான் கானை கைது செய்ய 3 வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து இம்ரான் கானின் சொந்த ஊரான பானி கல்லாவில் உள்ள இல்லத்தைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர்.
அவருடைய முன்ஜாமீன் முடியும் வரை போலீசார் அங்கு இருப்பார்கள் என்றும் பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளார். இம்ரான் கானும் அவர் மனைவி புஷ்ராவும் பலகோடி ரூபாய் ஊழல் செய்து உள்ளதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
Comments