ஆந்திராவில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்காமல் தப்பிய புலியை பிடிக்கும் பணி தீவிரம்.!
ஆந்திராவில், கூண்டில் சிக்காமல் தப்பிய புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், புலி தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கிழக்கு கோதாவரி மாவட்டம் சர்பவரம் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக உலவி வரும் புலி ஒன்று, அப்பகுதியில் உள்ள ஆடு, மாடுகளை அடித்துக்கொன்று தின்றுள்ளது.
இதனால், அப்புலியை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
புலியை பிடிக்கும் பணியில் 120-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், அதனை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டின் அருகே வந்த புலி சிக்காமல் தப்பியது.
Comments