இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து.. 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி.!
புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி இளைஞர் உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் நைனார் பாளையத்தை சேர்ந்த 26 வயதான புகழேந்தி என்பவர் புதுச்சேரியில் பேட்டரி கடை நடத்தி வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் பின்னால் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Comments