கழிவறையில் பிறந்து 40 நாட்களேயான ஆண் குழந்தையின் சடலம்-பெற்றோர், பாட்டியிடம் தீவிர விசாரணை

0 5787

அரக்கோணம் அருகே பிறந்து 40 நாட்களேயான ஆண் குழந்தை நள்ளிரவில் கழிவறை பக்கெட் தண்ணிரில் தலைகீழாக மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெற்றோர், பாட்டியிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

காதலித்து திருமணம் செய்துக் கொண்ட மனோ - அம்சா நந்தினி தம்பதிக்கு கடந்த 40 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.

நேற்றிரவு தாயின் அருகில் படுத்துறங்கிய குழந்தை நள்ளிரவில் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. உறவினர்கள் வீடு முழுவதும் தேடிய நிலையில், கழிவறையில் இருந்த பக்கெட்டில் குழந்தை சடலமாக கிடந்ததாக கண்ணீர் மல்க தாய் அம்சா நந்தினி போலீசில் புகாரளித்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், குழந்தையின் சடலத்தை வைத்துக் கொண்டு உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தோரை கலங்க வைத்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments