ஜூன் 7 முதல் மழைப்பொழிவு அதிகரிக்கும்-இந்திய வானிலை ஆய்வுத் துறை
தென்னிந்தியாவில் மழைப்பொழிவு ஜூன் 7 முதல் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் வழக்கத்தை விட முன்கூட்டி மே 29ஆம் நாள் தொடங்கியது.
எட்டு நாட்கள் ஆன நிலையிலும் இதுவரை தென்னிந்தியாவில் அதிக மழைப் பொழிவு இல்லை என்பதால் பருவமழை வலுக் குறைந்துள்ளதாகத் தனியார் வானிலை முன்கணிப்பு முகமையான ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.
Comments