மவுண்ட் புலூசன் எரிமலை வெடித்துச்சிதறல்.. 4 கி.மீ சுற்றுப்பரப்பில் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்..!
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு தெற்கே உள்ள மவுண்ட் புலூசன் எரிமலை வெடித்துச்சிதறி வருகிறது.
பல அடி உயரத்திற்கு சாம்பல் புகை வெளியேறி வரும் நிலையில் முதல் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதுடன் எரிமலையை சுற்றி 4 கிலோமீட்டர் சுற்றுப்பரப்பிற்குள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மணிலாவுக்கு தென்கிழக்கே 600 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த எரிமலை அந்நாட்டில் உயிர்ப்புடன் இருக்கும் எரிமலைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Comments