பைக் திருட்டில் ஈடுபட்ட நபருக்கு, தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..!
வேலூர் காட்பாடி அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
பெருமாள்குப்பம் பகுதியில் விவசாய கூலித்தொழிலாளி கோவிந்தராஜ் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கின் சைடு லாக்கை உடைத்த மர்மநபர்கள் 3 பேர் அதை எடுத்துச்செல்ல முயன்றுள்ளனர்.
அதை பார்த்த கோவிந்தராஜ் கூச்சலிடவே, தப்பியோடிய மூவரையும் ஊர்ப் பொதுமக்கள் துரத்திச்சென்றனர். ஒருவன் மட்டுமே பிடிபட்ட நிலையில் அவனை நையப்புடைத்த அவர்கள் மேல்பாடி போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர். தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments