2022ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு.. சென்னை, மும்பை உள்ளிட்ட 75 இடங்களில் நடத்தப்படுகிறது..!
2022ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு இந்தியா முழுவதிலும் இன்று நடைபெறுகிறது.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப்பணிகளுக்கான குடிமைப்பணி தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.
டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட 75 இடங்களில் இன்று தேர்வு நடைபெறும் நிலையில், தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை, மாலை என இருவேளையும் நடைபெறும் இந்த தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர்.
Comments