சுவிட்சர்லாந்தில் பிறந்த ஆமைக்குஞ்சு ஒன்றுக்கு அல்பினிசம் எனப்படும் உடல் வெளிறிப்போதல் நோய்..!
சுவிட்சர்லாந்தில் உள்ள உயிரியல் பூங்காவில் கடந்த மே மாதத்தில் பிறந்த காலபெகோஸ் ஜெயண்ட் வகை ஆமைக்குஞ்சு ஒன்று அல்ஃபினிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
உடன் பிறந்த மற்ற ஆமைக்குஞ்சுகளின் நிறத்துடன் ஒத்துப்போகாமல் அதன் உடல் மிகவும் வெளிறிப்போயிருப்பதுடன், அதன் கண்கள் சிவப்பு நிறத்தில் உள்ளன.
50 கிராம் மட்டுமே எடை கொண்ட அந்த ஆமை ஒருவரது உள்ளங்கை அளவிலேயே உள்ளது. ஆனால் அது பலவீனமாக இல்லை என்றும், 200 வருடங்கள் வரை வாழும் என்றும் பூங்கா மேலாளர் தாமஸ் மோரெல் தெரிவித்தார்.
Comments