படிச்சுட்டுதான், வேலைக்கு வந்துருக்கோம்.. மரியாதை இல்லாமல் அடிக்கிறார்கள்..!
கோவையில் ஸ்விக்கி நிறுவன ஊழியரை போக்குவரத்து காவலர் தாக்கும் வீடியோ காட்சி வெளியான நிலையில், அந்த காவலரை கைது செய்தும் பணி இடை நீக்கம் செய்தும் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் நீலாம்பூரை சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரியான மோகன சுந்தரம் என்பவர் ஸ்விக்கியில் உணவு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.இவர் நேற்று, தனது இருசக்கர வானத்தில் சென்றபோது, போக்குவரத்து காவலரான சதீஷ் என்பவர், பளார் என கன்னத்தில் அறைந்ததுடன், வாகன சாவியையும் கைப்பற்றினார்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இது பற்றி தெரிவித்த மோகன சுந்தரம், இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற பள்ளி வாகனத்தை, தான் மடக்கி பிடித்தபோது போலீசார் தாக்கியதாக கூறினார். இந்நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்த கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே தாக்குதல் நடத்திய பீளமேடு போக்குவரத்து காவலர் சதீசை கைது செய்து உள்ளதாகவும், தற்காலிக பணி நீக்கம் செய்து உள்ளதாகவும் மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.
Comments