நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து 3 பெண்கள் கைவரிசை... 3 சவரன் செயின் திருட்டு!

0 25162

சேலம் மாவட்டத்தில் நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து 3 பெண்கள் தங்க செயினை ஆடைக்குள் மறைத்து திருடிச் சென்றனர்.

வாழப்பாடி அருகே உள்ள சசி ஜுவல்லரி நகைக்கடைக்கு முக கவசம் அணிந்தபடி வந்த 3 பெண்களில் ஒருவர் மோதிரம் வாங்க வந்த நிலையில், 2 பெண்கள் தங்க செயின் வாங்க வந்ததாக கூறி நகைகளை பார்த்துள்ளனர்.

அப்போது மோதிரம் வாங்க வந்த பெண் தனக்கு அவசரம் என்று கூறி கடை உரிமையாளரை திசை திருப்பிய நேரத்தில் 2 பெண்களில் ஒருவர் 3 சவரன் தங்க செயினை எடுத்து ஆடைக்குள் மறைத்து வைத்துள்ளார்.

இதனையடுத்து அனைவரும் நகை வாங்காமல் சென்றுவிட்ட பின்பு தான் தங்க செயின் காணாமல் போனது தெரியவந்தது. புகாரின் பேரில் சிசிடிவி பதிவுகளை கொண்டு 3 பெண்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments