பிரபல சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 14.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு.!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரக்காடு கிராமத்தில் பிரபல சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான சுமார் 14.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
அந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதால் சுமார் 25 ஆண்டுகளாக அங்கிருந்த முருகன் கோவிலில் கிராம மக்கள் வழிபட முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், நிலம் மீண்டும் கையகப்படுத்தப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
ஏராளமானோர் அந்த முருகன் கோவிலுக்கு திரண்டு அரோகரா என கோஷமிட்டு முருகனை வழிபட்டுச் சென்றனர்.
Comments