62 இலட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் பெற்ற அதானி நிறுவனம்.!
மத்திய அரசின் மின்னுற்பத்தி நிறுவனமான தேசிய அனல் மின் கழகம் 62 இலட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு ஆறாயிரத்து 585 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆறு டெண்டர்களை அதானி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
அண்மையில் வழங்கப்பட்ட இந்த டெண்டர்களை எடுக்கச் சென்னையைச் சேர்ந்த செட்டிநாடு லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் போட்டியிட்டன.
ஏற்கெனவே மார்ச் மாதத்தில் 57 இலட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய எட்டாயிரத்து 422 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 டெண்டர்களை அதானி நிறுவனத்துக்குத் தேசிய அனல் மின் கழகம் வழங்கியிருந்தது.
Comments