தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

0 2511
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, ஜூன் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

மேலும், வரும் 8ஆம் தேதி வரை கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments