என் இடத்துல எப்படி புதைப்பது.. அடக்கம் செய்த அண்ணனின் உடலை 18 நாட்களுக்கு பின் தோண்டி எடுத்த தம்பி!
கன்னியாகுமரி மாவட்டத்தில், தனக்கு சொந்தமான இடத்தில் புதைக்கப்பட்ட இறந்த அண்ணனின் உடலை 18 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைத்தது தொடர்பாக தம்பியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிராத்தூர் பகுதியை சேர்ந்த ஜெஸ்டஸ், கடந்த மாதம் 16ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் அவரது தம்பிக்கு சொந்தமான அவர்களது தாய், தந்தையை அடக்கம் செய்த கல்லறைத் தோட்டம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இதில் உடன்பாடு இல்லாத ஜெஸ்டஸின் தம்பி கிறிஸ்டோபர், குடும்பத்தினரோடு சேர்ந்து அடக்கம் செய்யப்பட்ட ஜெஸ்டஸின் உடலை தோண்டி எடுத்து எதிர்ப்பை மீறி வேறோரு இடத்தில் அடக்கம் செய்துள்ளார்.
Comments