ஒற்றைக் காலால் பள்ளிக்குச் சென்றுவரும் சிறுவனுக்கு செயற்கைக் கால் பொருத்தும் செலவை ஏற்பதாகப் பிரேம் பண்டாரி அறிவிப்பு.!
ஜம்மு காஷ்மீரில் ஒற்றைக் காலால் துள்ளித் துள்ளிப் பள்ளிக்குச் சென்றுவரும் சிறுவனுக்கு இலவசமாகச் செயற்கைக் கால் பொருத்தும் செலவை ஏற்றுக்கொள்வதாக ஜெய்ப்பூர் பூட் தொண்டு நிறுவனத் தலைவர் பிரேம் பண்டாரி அறிவித்துள்ளார்.
ஹண்டுவாராவைச் சேர்ந்த சிறுவன் பர்வைஸ், வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு ஒற்றைக் காலில் துள்ளித் துள்ளிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது.
இதை டுவிட்டரில் பார்த்த பிரேம் பண்டாரி, அந்தச் சிறுவனின் குடும்பத்தைத் தொடர்புகொள்ளப் போவதாகவும், இலவசமாகச் செயற்கைக் கால் பொருத்த ஏற்பாடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments