லாரியில் கொண்டுசெல்லப்பட்ட ராட்சத தூண்கள் கட்டப்பட்டிருந்த சங்கிலி அவிழ்ந்து விழுந்து பெரும் விபத்து.!
திருவள்ளூரில் தனியார் தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்காக லாரியில் கொண்டுசெல்லப்பட்ட ராட்சத தூண்கள் திடீரென சாலையில் சரிந்து விழுந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தலைமை அரசு மருத்துவமனை அருகே சென்ற போது லாரியில் கட்டப்பட்டிருந்த இரும்புச்சங்கிலி அறுந்ததில் தூண்கள் சாலையில் சரிந்தன. அந்த சமயத்தில் லாரியின் அருகே யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Comments