சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்ட 18 வயது பூர்த்தியாகாத முக்கியப் பிரமுகரின் மகன்.!
ஹைதராபாதில் பதின்பருவத்து சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 18 வயது பூர்த்தியாகாத முக்கியப் பிரமுகரின் மகன் உள்பட 5 பேர் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். தெலங்கானா ராஷ்ட்ர சமிதி எம்எல்ஏ மகன் உள்பட 3 சிறார்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால் போலீசார் தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர்.
பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் மே 28 ஆம் தேதி 17 வயது சிறுமியை சொகுசு காரில் வைத்து 5 பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.
Comments