இந்தி நடிகர் தர்மேந்திரா மும்பை தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி.!

0 2445

இந்தி நடிகர் தர்மேந்திரா மும்பை தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அவரை 4 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தாம் நலமாக இருப்பதாக தர்மேந்திராவும் அவர் மனைவி ஹேமா மாலினியும் தெரிவித்துள்ளனர்.

வழக்கமான பரிசோதனை முடித்து தர்மேந்திரா வீடு திரும்பி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 86 வயதான தர்மேந்திரா பாலிவுட்டின் ஆக்சன் நாயகனாக  ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments