நீட் தேர்வு இல்லாமல் பயின்ற கடைசி பேட்ச்... 36 பதக்கங்களை வென்ற மாணவன்.!
பாட்டிக்கும், தந்தைக்கும் புற்று நோய் பாதித்த நிலையில், தாயும் நோயால் பாதிக்கப்பட்ட இக்கட்டடான சூழலிலும் சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவர் பிரசாந்த் 36 பதக்கங்களை வென்று அபார சாதனை படைத்துள்ளார்.
சென்னை மருத்துவ கல்லூரியின் 186 வது இளங்கலை பட்டப்படிப்பு நிறைவு விழா நடைபெற்றது. மாணவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதக்கங்களை வழங்கினார்.
பிரசாந்த் என்ற மருத்துவ மாணவர் 19 பாடப்பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு 36 பதக்கங்களை வென்றார். அவரை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பாராட்டி பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினார். பட்டத்தை பெற்ற போது, தன்னுடைய தாயை அருகில் நிற்க வைத்து அவரையும் பெருமைபட வைத்தார் மாணவர் பிரசாந்த்.
தனது பாட்டியும் தாய் சாந்தியும்தான் தான் மருத்துவம் படிப்ப தூண்டுகோலாக இருந்ததாகவும் தன் குடும்பத்தில பாட்டிக்கும் தந்தைக்கும் புற்றுநோய் இருந்ததாகவும், தாய்க்கும் நோய் இருந்தாகவும், இத்தகைய இக்கட்டான சூழலை எதிர்கொள்ளவே, தான் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டதாகவும் பிரசாந்த் தெரிவித்தார்.
சென்னை மருத்துவ கல்லூரியில் பயின்ற மாணவர்களில் தான் அதிக பதக்கங்களை பெற்ற பெருமையும் தனக்கு உண்டு என்றும் நீட் தேர்வு எழுதாமல் மருத்துவம் பயின்ற கடைசி பேட்ச் மாணவன் என்றும் பிரசாந்த் கூறினார்.
நீட் மூலம் மட்டுமே திறமையான மாணவர்களை கண்டறிய முடியாது என்றும் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, சிவில் சர்விஸ் படிப்பை முடித்து ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று ஆசை உள்ளதாகவும் பிரசாந்த் கூறினார்.
Comments