துப்பாக்கி கலாச்சாரம் குறித்து அதிபர் ஜோ பைடன் கவலை.. துப்பாக்கி வாங்கும் வயது வரம்பை 21 ஆக உயர்த்த நடவடிக்கை..!

0 2764
ஆயுதம் வாங்கும் குறைந்தபட்ச வயது வரம்பை 21ஆக உயர்த்த முடிவு.. யாருடைய உரிமையையும் பறிக்கும் திட்டமில்லை - அதிபர் பைடன்

துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை 18 லிருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அண்மையில் 18 வயது இளைஞன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர்.

துப்பாக்கி கலாச்சாரம் வளர்வது குறித்து கவலை தெரிவித்த ஜோ பைடன், துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் வாங்குவதை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும், அது முடியாவிட்டால் சிறுவர்களைப் பாதுகாக்க அதன் வயது வரம்பையாவது உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

பள்ளிக்கோ பல்பொருள் அங்காடிக்கோ செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments