அமெரிக்காவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி திட்டம்
அமெரிக்காவில் 5 வயதுக்குட்பட்ட இளஞ் சிறார்களுக்கு வரும் 21ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்த பைடன் அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய வெள்ளை மாளிகையின் கொரோனா கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளார் ஆஷிஷ் ஜா, பெடரல் கட்டுப்பாட்டாளர்கள் அனுமதி அளித்தவுடன் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறுத்து அடுத்த வாரம் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் வெளிப்புற உறுப்பினர்கள் குழு கூடி பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்குவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்தார். குழந்தைகளுக்கு செலுத்த 1 கோடி டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக ஆஷிஷ் தெரிவித்தார்.
Comments