424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும் - பஞ்சாப் அரசு
பஞ்சாபில் 424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. 425 விஐபிகளுக்குப் பாதுகாப்பைத் திரும்பப் பெற்ற மறுநாளே காங்கிரசைச் சேர்ந்த பாடகர் சித்து மூசேவாலா வாகனத்தில் சென்றபோது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவருக்கான பாதுகாப்பைத் திரும்பப் பெற்றதும், அதை வெளிப்படையாக அறிவித்ததுமே கொலைக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. மீண்டும் பாதுகாப்பு அளிக்கக் கோரிய மனுவுக்குப் பதிலளித்த மாநில அரசு ஜூன் 7 முதல் 424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தது.
Comments