மக்களுக்கு பயனளிக்கும் புதிய யுக்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும் - முதலமைச்சர்
மக்களுக்கு பயனளிக்கும் புதிய யுக்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் துறைச் செயலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், குடிநீர் வசதி, ஊரக வீட்டு வசதித் திட்டம், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். நிலம் எடுப்பு மற்றும் அனுமதிகள் வழங்கல் போன்வற்றை துரிதப்படுத்த வேண்டும் என்றும் புதியத் தொழில்கள் தொடங்கப்படுவதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
Comments