சுமார் 4.69 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி.!
மலேசியா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய நாடுகளுக்கு மட்டும் 4 லட்சத்து 69 ஆயிரம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு கடந்த மே மாதம் 14 ஆம் தேதி கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததால், உலகச் சந்தையில் கோதுமையின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
பல்வேறு நாடுகள் இந்தியாவிடம் இருந்து கோதுமை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. சுமார் 17 லட்சம் டன் கோதுமை இந்திய துறைமுகங்களில் தேங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
பருவ மழைக்காலம் தொடங்க இருக்கும் சூழலில், மழையால் துறைமுகங்களில் இருக்கும் கோதுமை சேதமடையும் என்பதால், ஏற்றுமதி தடையை அரசு நீக்க வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments