கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சோனியா காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவார் என தகவல்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராவார் என அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா, சோனியா காந்திக்கு லேசான காய்ச்சலும், சில அறிகுறிகளும் உள்ளதால் அவர் சுய தனிமையில் உள்ளதாக கூறினார்.
தற்போதைய சூழலில் நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக ஜூன் 8ஆம் தேதியன்று நடைபெறவுள்ள விசாரணைக்கு அவர் ஆஜராவதில் மாற்றம் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
Comments