மவுன்ட் எட்னா எரிமலையில் பொங்கி வடியும் தீக் குழம்பு.. விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகை வெளியேற்றம்..!
இத்தாலி மவுண்ட் எட்னா எரிமலையில் இருந்து தீக் குழம்பு பொங்கி வலியும் கிளோஸ் அப் வீடியோ வெளியாகி உள்ளது.
அண்மை வாரங்களாக மீண்டும் குமுறத் தொடங்கிய எரிமலை, 3 ஆயிரத்து 300 மீட்டர் உயரத்தில் இருந்து தீக் குழம்பை கக்கி வருகிறது. மத்திய தரைக்கடல் தீவான சிசிலியில் எரிமலையின் சாம்பல் கழிவு மற்றும் கரும் புகை சூழ்ந்து காணப்படுகிறது.
எரிமலையின் இரண்டாயிரத்து 800 மீட்டர் தூரத்தில் இருந்து வெளியேறும் எரிகுழம்பை கிளோஸ் அப் வீடியோவாக பதிவு செய்து புகைப்பட கலைஞர்கள் குழு வெளியிட்டுள்ளது.
Comments