"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
திருமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்த இன்று முதல் தடை..!
திருமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்தவும் விற்பனை செய்யவும் இன்று முதல் தடை விதித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.
அதன் படி, பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பைகள், கவர்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அலிபிரி சோதனைச் சாவடியில் ஆய்வு செய்த பிறகே பிளாஸ்டிக் இல்லாத பொருட்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடைகளில் பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தின்பண்டங்கள், ஷாம்பு மற்றும் ஓட்டல்களில் உணவுப் பொருட்கள் பார்சலுக்கு பிளாஸ்டிக் பையில் அடைத்து விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது
Comments