குரங்கு அம்மை சந்தேகம் இருந்தால் மாதிரிகளை புனே ஆய்வகத்திற்கு அனுப்பவும்… மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்
குரங்கு அம்மைபரவலைத் தடுக்க விமான நிலையங்களில் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்திற்கிடமானோரின் மாதிரிகளை புனேயில் உள்ள தேசிய தொற்று ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கும்படி மத்திய அரசு மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது.
பாதிப்புக்கு ஆளானவர் என சந்தேகிக்கப்படும் நபரை 21 நாட்கள் தினமும் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டல்களை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று இல்லை என்ற போதும் உலக அளவில் அதிகரித்து வருவதனால் முன்னெச்சரிக்கையாக இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Comments