ஷாங்காய் நகரில் 2 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு
சீனா ஷாங்காய் நகரில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து, வணிக வளாகங்கள் உள்ளிட்ட அடிப்படை சேவைகள் 75 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் திரையரங்குகள், அருங்காட்சியம், உடற்பயிற்சி கூடம் தொடர்ந்து மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு பகுதிகளில் நிலைமைக்கு ஏற்ப தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஏறத்தாழ ஆறரை லட்சம் பேர் தொடர்ந்து தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சேவைகளை பெற 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழை மக்கள் சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments