மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் - பிரகலாத் சிங் படேல்
மோடி தலைமையிலான மத்திய அரசின் அடுத்த பெரிய திட்டமாக மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் அமலுக்கு வர இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார்.
சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சட்டிஸ்கரின் ஆளும் காங்கிரஸ் அரசு மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கான இலக்கை எட்டத் தவறி விட்டதாக விமர்சனம் செய்தார்.
மத்திய அரசு விரைவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வர இருப்பதாக அப்போது அவர் தெரிவித்தார். இதற்கான பெரிய அளவில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் பிரகலாத் பட்டேல் தெரிவித்தார்
Comments