உள்ளூர் விநியோகம் அதிகரித்து வருவதால் அரிசி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கும் திட்டமில்லை - மத்திய அரசு
உள்ளூர் விநியோகம் அதிகரித்து வருவதால் அரிசி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக பேசிய மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர், அரசின் உணவு சேமிப்புக் கிடங்குகளிலும், தனியார் வணிகர்களிடமும் போதிய அளவு அரிசி உள்ளது என்றார்.
அதேவேளையில், நாட்டில் அரிசி விலையும் தற்போது கட்டுக்குள் உள்ளது என்றும் தெரிவித்தார். கடந்த மாதம் 14ந்தேதி அன்று கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments