அனைத்துத் துறை அமைச்சர்கள்- செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை.!
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அரசுத் துறைகளின் செயல்பாடுகள், நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் இன்று காலை 10 மணி அளவில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று நீர்வளம், பொதுப்பணி உள்ளிட்ட 10 பிரதான துறைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது.
மற்ற துறைகளின் செயல்பாடுகள் குறித்து நாளை விவாதிக்கப்படவுள்ளது. சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள், அவற்றின் இப்போதைய நிலை, தேர்தல் வாக்குறுதிகள் போன்ற அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளன.
Comments