மோசமான வானிலை காரணமாக வந்த வழியிலேயே திரும்பிய விமானம்... 12 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் விரக்தி!

0 2510

அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு 12 மணி நேரத்தில் ஜப்பான் சென்றடைய வேண்டிய விமானம், 12 மணி நேரத்துக்குப் பின் மீண்டும் அமெரிக்காவிலேயே தரை இறங்கியதால் பயணிகள் விரக்தி அடைந்தனர்.

டாலஸ் நகரில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ நோக்கி சுமார் 7 மணி நேரம் பயணித்த அந்த விமானம், ரஷ்ய கடற்கரை அருகே ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால் தொடர்ந்து செல்ல முடியாமல் வந்த வழியிலேயே திரும்பி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தரை இறங்கியது.

டலாஸ் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விமானத்தில் செல்ல வெறும் 3 மணி நேரமே தேவைப்படும் நிலையில் இந்த விமானம் 12 மணி நேரம் எடுத்து கொண்டதாக இதில் பயணித்த ஒருவர் டுவிட்டரில் கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments