மரியுபோல் துறைமுகத்தில் போக்குவரத்தை தொடங்கியது ரஷ்யா..
ரஷ்ய கட்டுப்பாட்டில் வந்துள்ள மரியுபோல் நகரில் முதல் முறையாக சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
மரியுபோல் உருக்காலையில் பதுங்கியிருந்த உக்ரைன் வீரர்கள் 2,400 பேர் சரணடைந்ததும் அந்நகரம் ரஷ்ய படைகளின் முழு கட்டுப்பாட்டில் வந்தது.
துறைமுகத்தில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும், சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு ரஷ்யா அனுமதி அளித்தது.
இதையடுத்து, மரியுபோலில் இருந்து 2,500 டன் உருக்கு ரஷ்யாவின் ரோஸ்டவ்-அன்-டான் (Rostov-on-Don) துறைமுகத்துக்கு கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டது. தங்கள் நாட்டு வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
Comments