உலகின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெயரைப் பெற்றார் 103 வயதான ரூத் லார்சன்..
சுவீடன் நாட்டை சேர்ந்த 103 வயதான ரூத் லார்சன் என்ற பெண் உலகின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
தனக்கு 90 வயதாகும் போது பாரா கிளைடிங், கிளைடிங், பாராசூட்டில் பறப்பது உள்ளிட்டவற்றை அதிகம் கற்க விரும்பியுள்ளார் ரூத் லார்சன்.
பின்னர் தொடர்ந்து ஸ்கை டைவிங் பயிற்சி மேற்கொண்டு வந்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மொடாலா பகுதியில் ஸ்கை டைவிங் செய்து உலகின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெயரை பெற்றார்.
Comments