கடை முதலாளி பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் கடிதம் எழுதி விட்டு தீக்குளிப்பு

0 5358

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் குடும்ப வறுமையை போக்க வேலைக்கு சென்ற தன்னை, கடை முதலாளி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாக கடிதம் எழுதிவிட்டு பெண் தீக்குளித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு பவானியை சேர்ந்த பெண் ஒருவர் எழுதியுள்ள கடிதத்தில், நவநீதன் என்பவருக்கு சொந்தமான டைல்ஸ் கடையில் 11 ஆண்டுகள் வேலை பார்த்ததாகவும், உரிமையாளர் பலமுறை பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவ செலவுக்கு பணம் கேட்டு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதன் வீட்டிற்கு சென்ற போது விரட்டப்பட்டதாகவும், நவநீதன், அவரது மனைவி அகிலா உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் எழுதிவிட்டு தீக்குளித்ததார்.

மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் எழுதிய கடிதம் மற்றும், வீடியோவை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments