வரும் கல்வியாண்டில் இருந்து 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் நிறுத்தம் - பள்ளிக் கல்வித்துறை

0 4743

வரும் கல்வியாண்டு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மத்திய அரசின் நிதியிலிருந்து கற்பிக்கப்படும் டெய்லரிங், பியூட்டிஷன், உள்ளிட்ட பிரிவுகள் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 5 பாடங்களே இருக்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனிடையே, நடப்பு கல்வியாண்டில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments