இது என்ன புதுசா இருக்கு?... ஒட்டகத்தை பயன்படுத்தி மணல் கடத்தல்..!

0 2454
இது என்ன புதுசா இருக்கு?... ஒட்டகத்தை பயன்படுத்தி மணல் கடத்தல்..!

சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய நபர் ஒருவர், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஒட்டகத்தை மணல் கடத்தலுக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.

மரவ மங்கலத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், ராஜஸ்தானில் இருந்து ஆண் ஒட்டகம் ஒன்றை வாங்கி வளர்த்து வருகிறார். அதனை மாட்டு வண்டியில் கட்டி நாட்டாறு ஆற்றில் இருந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதனைக் கண்டு மாட்டு வண்டியுடன் சேர்த்து ஒட்டகத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால், ஒட்டகத்தை முறையாக பராமரிக்க முடியாததால் உரிமையாளரிடமே அதனை ஒப்படைத்து விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments