டெல்டா மாவட்டங்களில் இன்று ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்.
கடந்த 24 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் வடிகால் பணிகளை முதலமைச்சர் பார்வையிடுகிறார்.
இன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் நாளை நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மாவட்டங்களிலும் ஆய்வு செய்து விவசாயிகளின் கருத்துகளை ஸ்டாலின் கேட்டறிய உள்ளார்.
Comments