ரஷ்யாவின் உரம் சப்ளையை உறுதி செய்துள்ள இந்தியா

0 2836

ரஷ்யாவிடமிருந்து இந்தியா உரம் சப்ளையை உறுதி செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவுடன் நீண்ட கால உர இறக்குமதிக்கான பேச்சுவார்த்தையை இந்தியா நடத்தியது. உலகளவில் உரம்விலை அதிகரித்த நிலையில் ரஷ்யாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக பல ஆண்டுகளுக்கு உரம் இறக்குமதி செய்ய உடன்படிக்கை எட்டப்பட்டது.

ரஷ்யாவிடமிருந்து 18 லட்சம் டன் உரங்களை ஆண்டுதோறும் இந்தியா இறக்குமதி செய்கிறது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்து இறக்குமதிகளை ரத்து செய்துள்ள நிலையில் இந்தியா தனது உரம் சப்ளையை ரஷ்யாவுடன் உறுதி செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments